Archives

வல்லமையின் அலைகளின் இனிய புதுவருட வாழ்துக்கள்.

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. – சங்கீதம் 65:11

ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் அனைவருக்கும் வல்லமையின் அலைகளின் இனிய புதுவருட வாழ்துக்கள்.

எமது இனிய உறவுகளே இயேசுக்கிறிஸ்துவின் அன்பின் வழிநடத்தல் ஊடாக எல்லா வளமும் கொழிக்கின்ற இந்த புதிய ஆண்டிற்க்குள் புதுப் பொலிவடனும், புதிய வல்லமையுடனும் உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் வல்லமையின் அலைகள் சந்திக்கின்றது.

கடந்த நாட்களை திரும்பிபார்க்கையில் 2004, ஜூலை 31ம் திகதி சுவிசேஷ துதின் சேவைக்காக வல்லமையின் அலைகள் வானொலி வான் அலைகளில் வலம் வர ஆரம்பித்தது.

நெருக்கங்கள், பாடுகள், இழப்புக்கள் மத்தியிலும் சோராது இயேசுக்கிறிஸ்துவின் மேல் கொடியாய் படர்ந்து அவருக்குள் விசுவாசத்தில் வேர் கொண்டு புடமிட்ட தங்கம் போல் 2013ம் ஆண்டில் புதுக்கிருபையோடு புதுவல்லமையோடு புதிய மெருகூட்டப்பட்ட ஆற்றல் கொண்ட இணைய தளத்தோடு தனது சேவையை தொடர்கின்றது.

இந்த கனமான வேலையை செய்வதற்க்குரிய ஆவிக்குரிய வல்லமையை தருகின்ற ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவுக்கே எல்லா கனமும் துதிகளும். அத்தோடு எல்லா விதத்திலும் சிறுமையான என்னோடு தோளோடு தோள்கொடுத்து வானொலி சுவிசேஷ துதின் வேலையில் ஜக்கியத்தோடு பணி ஆற்றுகின்ற சக பணியாள பெருமக்களுக்கு எனது உள்ளம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். இந்த பணியாள பெருமக்கள் மக்களால் பாடப்படாத ‘பாடகர்கள்’ இவர்களுக்கு பரலோகத்தில் பெரிதான பலன் உண்டு இவர்களை கர்த்தர் எப்பொதும் கனம் பண்ணுவார்.

எந்த இடர்கள் வந்தாலும் நாம் அனைவரோடும் இணைந்து அநேக ஆத்துமாக்களை கர்த்தருக்கு அறுவடை செய்யும் இந்த மேன்மையான பணியை இயேசுக்கிறிஸ்துவின் உதவியோடு வல்லமையின் அலைகள் ஊடகம் ஓயாத அலைகளாக தொடரும்.

மீண்டும் எனது இனிய புதுவருட வாழ்துக்கள் தேவ சமாதானம் எப்பொழுதும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக, ஆமென்.

வின்சன் மனுவல்Greetings Friends

Greetings Friends,

Transition from cuneiform in ancient Mesopotamia to a consonant alphabet gave the opportunity to write God’s message by Moses. Gutenberg’s revolutionary movable type spread that message in print to the four corners of the earth. Today this message can be read, heard and seen anytime, anywhere – even in space – via the Internet. It is our conviction that the Waves of Power is now used by God in this third revolution in the propagation of the Gospel.

Now unto him that is able to do exceeding abundantly above all that we ask or think, according to the power that worketh in us, unto him be glory in the church by Christ Jesus throughout all ages, world without end. Amen.”(Ephesians 3:20-21)

It is exciting to let you know that we have reached a new turning point in our broadcasting.

We live in the days “when lawlessness increases and love of many gets cold”. Therefore, God reminds us, “O Man, what is good; and what does the Maker require of you, but to do justice and to love mercy and to walk humbly with your God”. Moreover, by obeying the word of Jesus Christ, Who is “coming soon to reward everyone according as his work shall be”, the Waves of Power through technical innovation is putting forth intensive effort to restore the broken relationship of the corrupt humanity with Christ, so that He will be “able to keep you from falling, and to present you faultless before the presence of His glory with exceeding joy.”


வணக்கம் நேயர்களே,
உங்கள் தரிசனத்தில் மலரும் வல்லமையின் அலைகளின் இந்தப் புதுமையான, மாறுபட்ட சங்கமம் எமக்குப் மிக உவகை அளிக்கிறது.

மனித நேயம் மறைந்து நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகின்ற இந்தக் கால சூழலில்

‘ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் தேவனுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?’

‘இதோ! நான் விரைவில் வருகிறேன் அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது’

என்ற இயேக்கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து சீர்குலைந்த மனித குலத்தின் உறவை இயேக்கிறிஸ்துவோடு மீண்டும் புதிப்பித்து அவரது வருகையின் கைம்மாற்றை பெற்று அவரோடு நாம் அனைவரும் சேர்த்ததுக்கொள்ளப்பட உருக் கொடுக்கும் முயற்சியே வல்லமையின் அலைகள் இணைய ஊடகத்தின் மூலக் கருவும் உள்ளார்ந்த நோக்கமாகும்.